உங்கள் iPhoneஇல் Wi-Fiஐ ஆன் செய்தல்

அமைப்புகள்  > Wi-Fi என்பதற்குச் சென்று Wi-Fiஐ ஆன் செய்யவும்.

நெட்வொர்க்கில் இணைக்க, பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:

  • நெட்வொர்க்: தேவைப்பட்டால் பாஸ்வேர்டை உள்ளிடவும்.

  • மற்றவை: மறைக்கப்பட்ட நெட்வொர்க்கில் இணையவும். மறைக்கப்பட்ட நெட்வொர்க்கின் பெயர், பாதுகாப்பு வகை மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும்.

திரையின் மேலே Wi-Fi ஐகான் ஐகான் காட்டப்பட்டால், Wi-Fi நெட்வொர்க்குடன் iPhone இணைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். (இதைச் சரிபார்க்க, Safariஐத் திறந்து ஓர் இணையப் பக்கத்தைப் பார்க்கவும்.) நீங்கள் அதே இருப்பிடத்திற்கு வரும்போது iPhone மீண்டும் இணைக்கப்படும்.